ETV Bharat / state

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தொடரும் ஆர்ப்பாட்டம்!

கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 63ஆம் நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்  63ஆம் நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Mar 2, 2021, 2:53 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கட்டணத்தை வசூலிக்கக் கோரி மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, அரசாங்கம் இந்த கல்லூரி கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரியாக திகழும் என்றும், அதுமட்டுமின்றி அரசு கட்டணம் இங்கு வசூலிக்கப்படும் எனவும் அறிவித்து அரசாணை வெளியிட்டது.

ஆனால், கல்லூரி நிர்வாகம் இங்கு மாணவரிடம் பல மடங்கு கூடுதல் கட்டணத்தை மீண்டும் செலுத்த வலியுறுத்திவருகிறது. போராட்டம் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தை கையில் எடுத்து போராடிவருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மார்ச். 2) 63ஆவது நாளாக அரசு உத்தரவை அமல்படுத்தி குறைந்த கட்டணத்தை இங்கு வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி முதல்வர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மருத்துவ மாணவர்கள் கூறுகையில், எங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு கல்வி கட்டணமும் குறைந்த அளவில் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், தற்போது பழைய கட்டணத்தை செலுத்த கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது.

அதுமட்டுமின்றி, தற்போது ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளனர். அதில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பழைய கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

இதையும் படிங்க...ஸ்டாலினை எதிர்த்துக் களம்காணும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.