ETV Bharat / state

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று போராட்டம்!

கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினர்.

65 வது நாளாக ஜிஓ 45 ஐ அமல்படுத்தக்கோரி
65 வது நாளாக ஜிஓ 45 ஐ அமல்படுத்தக்கோரி
author img

By

Published : Mar 4, 2021, 8:27 AM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தொடர் போராட்டங்கள் நடத்தியதையடுத்து, முதலமைச்சர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் எனவும் இங்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் மற்ற அரசு கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்து ஆணை பிறப்பித்தார்.

இருந்தபோதிலும், கல்லூரி நிர்வாகம் அரசு ஆணையை மதிக்காமல் 30 மடங்கு கூடுதலாக கட்டணம் செலுத்தினால்தான் தேர்வு எழுத முடியும். அதேபோல், தேர்வு முடிவுகளையும் நிறுத்திவைத்து மாணவர்களுக்கு மன உளைச்சலை தருவதாக கூறி மீண்டும் கடந்த ஆறு நாள்களாக போராட்டத்தை தொடங்கி நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மார்ச்4) 65ஆவது நாளாக தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினர். அப்போது, மாணவர்கள கோஷங்கள் எழுப்பினர். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “நாங்கள் 59 நாள்களாக தொடர் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக அரசாங்கம் அறிவிப்பாணையை வெளியிட்டு, இங்கு அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு அது போல், எதுவும் வசூலிக்க உத்தரவு பிறபிக்கவில்லை.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று போராட்டம்

அதேபோல், எழுதிய தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து எங்களுக்கு மன உளைச்சலை தருகின்றனர். எனவே, எங்களுக்கு ஒற்றை கோரிக்கையுடன் அரசு கல்லூரியில் அரசு கட்டணம் தான் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒற்றைக்காலில் நின்று இன்று போராட்டத்தை நடத்தியுள்ளோம். அதனால், எங்கள் கோரிக்கையை வெல்லும் வரை நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” என மாணவர்கள் கூறினார்.

இதையும் படிங்க...அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.