கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரி 2013ஆம் ஆண்டு போதிய நிதி இல்லாத காரணமாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசு நிர்வகித்துவருகிறது.
இந்த மருத்துவக்கல்லூரியில் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு இணையாக முதல் நிலை மாணவர்களுக்கு கட்டணம் கேட்கின்றனர். இந்தக் கல்லூரியை அரசு ஏற்றதற்கான அரசாணை வெளியிட வேண்டும்.
கரோனா காலத்தில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஊதியம் வழங்க தாமதப்படுத்துவது ஏன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் இன்று (ஆக. 27) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் கரோனா ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அப்போது இது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்