சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிறைவேற்றக்கோரி ஊழியர்கள் சங்கத்தலைவர் மனோகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ”சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதில் நான்காயிரத்து 500 முதல் நான்காயிரத்து 700 பணியாளர்கள் வரை பணி செய்துவருகின்றனர்.
பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணப்பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பணியில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்திற்கென நிரந்தரப் பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குநர் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இதனால் பல்கலைக்கழக வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'டெட்' தேர்ச்சி சான்றிதழ் இனி ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்!