ETV Bharat / state

குரூப் 2 தேர்வு முறைகேடு: விசாரணைக்கு ஆஜராக ஒரே ஊரைச் சேர்ந்த 12 பேருக்கு அழைப்பாணை! - tnpsc group 2 exam forgery

கடலூர்: குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணைக்காக, ஒரே ஊரைச் சேர்ந்த 12 பேரை நாளை கடலூர் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு, சிபிசிஐடி காவலர்கள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

tnpsc issue  tnpsc exam forery  டிஎன்பிஎஸ்சி முறைகேடு  குரூப் 2 முறைகேடு  குரூப் 4 தேர்வு முறைகேடு  tnpsc group 2 exam forgery  cbcid police  cbcid police AAV
குரூப் 2 தேர்வு முறைகேடு
author img

By

Published : Feb 18, 2020, 10:58 AM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சந்தேகத்திற்கிடமாக சிலரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நான்கு பேரை காவலர்கள் கைது செய்தனர்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத் தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கடலூர் அருகேயுள்ள கிழக்கு ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 12 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் இதுகுறித்து சிபிசிஐடி காவலர்கள் விசாரிக்க உத்தரவிடவேண்டும் எனவும் புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ராமாபுரத்தைச் சேர்ந்த 12 பேருக்கும் சிபிசிஐடி காவலர்கள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். அழைப்பாணை அனுப்பப்பட்ட 12 பேரில், ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் வீதம் மூன்று குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, கடலூர் நடுவீரப்பட்டைச் சேர்ந்த தயாநிதி, பத்திரக்கோட்டையைச் சேர்ந்த தவமணி ஆகியோரைக் கைது செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இச்சம்பவத்தில், சில அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைதானவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அதிகாரிகள், காவலர்களின் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 2,100 மீனவர்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.