கடலூர் மாவட்டத்திலுள்ள திருமாணிக்குழி, வானமாதேவி, வான்பாக்கம் ஆகிய பகுதிகளில் மணல் குவாரி அமைத்து கொடுக்காததைக் கண்டித்தும், கடலூர் வட்டத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து மாட்டு வண்டி மணல் குவாரிகளை இயக்காத பொதுப்பணித் துறையை கண்டித்தும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மணல் குவாரிகளை மூடி மாட்டு வண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்காதது அவர்களின் வாழ்வாதரத்தை பாதிக்ககூடிய வகையில் அமைகிறது என்று புலம்பிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் நகர செயலாளர் பழனி தலைமை தாங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நகர செயலாளர் ஒன்றிய செயலாளர் விசுவநாதன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சிஐடியு மாவட்ட தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார்.