கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலக்கரி நிறுவனத்தில் கடந்த ஏழாம் தேதி இரண்டாம் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். அதில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் அனல்மின் நிலையத்தில் உலர் சாம்பல் லாரிகளில் ஏற்றும் இடத்தில் உள்ள கட்டுமானம் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொழிலாளிகள் அப்பகுதியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
என்எல்சி நிறுவனத்தில் மீண்டும் மீண்டும் விபத்து ஏற்படுவதால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை என்எல்சி நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க...என்எல்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்!