தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் அதிமுக சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில்,கடலூரில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர்களுக்கு வழங்க அதிமுக சார்பில் 5 ஆயிரம் முகக் கவசங்கள், 5 ஆயிரம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகளை அனைத்திந்திய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மத்திய மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.