ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - கொடியேற்றத்துடன் தொடக்கம் - Chidambaram Natarajar Temple Arudra Darshan Festival

சிதம்பரம்: நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா
author img

By

Published : Jan 1, 2020, 12:56 PM IST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்படும். இந்தாண்டு ஆருத்ர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் இன்று கோயில் உற்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்து, திருவிழா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர், சிறப்பு ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா
வருகிற ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை அன்று தேரோட்டம் நடைபெறவிருக்கிறது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் வைக்கப்பட்டு, நான்கு மாட வீதிகளையும் தேர் வலம்வரும். பின்னர் கோயிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு ஆராதனை நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மறுநாள் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் மகா அபிஷேகம், லட்சார்ச்சனை, ஆபரண அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் முடிந்த பிறகு மதியம் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதம் நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

இதையும் படிங்க: ஸ்ரீஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் ஆரம்பம்!

Intro:சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. Body:சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 9ந் தேதி தேரோட்டமும், 10ந் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
     
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு ஆருத்ர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
       
கோயிலின் உள்ளே நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் இன்று கோயில் உற்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்து, திருவிழா நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். இதையொட்டி கோயில் கொடி மரத்தில் உள்ள கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
     
வருகிற  9ந் தேதி வியாழக்கிழமை அன்று தேரோட்டம் நடக்கிறது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் வைக்கப்பட்டு 4 மாட வீதிகளையும் வலம் வரும். பின்னர் கோயிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு ஆராதனை நடைபெறும்.
     விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மறுநாள் 10ந் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் மகா அபிஷேகம், லட்சார்ச்சனை, ஆபரண அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் முடிந்த பிறகு மதியம் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதம் நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
     இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோயிலில் களை கட்டி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.