ETV Bharat / state

கடலூரில் பேருந்துகள் விபத்து நிகழ்ந்தது எப்படி? - பேருந்தில் பயணம் செய்த பெண் கூறிய தகவல்! - Cuddalore MK Stalin Given

கடலூர் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த படி, தலா ரூ.2 நிவாரணத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 19, 2023, 11:05 PM IST

கடலூர்: பண்ருட்டி அருகே பட்டம்பாக்கம் என்ற இடத்தில் இன்று காலை 10 மணி அளவில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர (Bus Accident in Cuddalore) விபத்துக்குள்ளானது. கடலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சுகம் என்ற பேருந்து பண்ருட்டி நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேபோல, பண்ருட்டியில் இருந்து துர்கா என்ற தனியார் பேருந்து அதிவேகமாக அவ்வழியாக வந்துள்ளது.

இந்த நிலையில், பட்டாம்பாக்கம் அருகில் வந்த துர்கா என்ற பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால், அதி வேகத்துடன் வந்த அப்பேருந்து, எதிர்பாராத விதமாக அதன் வலதுபுறத்தில் இழுத்துச் செல்லப்பட்டு எதிரே கடலூரில் இருந்து வந்த பேருந்தின் மீது நேருக்கு நேராக மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன் பகுதிகள் மிக கோரமாக நசுங்கியதில், சுகம் பேருந்து ஓட்டுனர் முருகன், துர்கா பேருந்து ஓட்டுனர் அங்காள மணி, பேருந்தில் பயணம் செய்த தனபால் சீனிவாசன் ஆகியோர் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார்.

இந்த கோர விபத்தில், 80 பேர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், படுகாயமடைந்தவர்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நல அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த பயங்கரமாக விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்த நிலையில், அதற்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இதன் பின்னர், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், படுகாயமடைந்தவர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நல அமைச்சர் சி.வி.கணேசன் அகியோர் அங்கு சென்று பார்வையிட்டு அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 'காயமடைந்தவர்கள் அனைவருக்கும் உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயிருக்குப் போராடியவர்கள் என எட்டு பேர் புதுச்சேரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும்' தெரிவித்தார். இவரைத்தொடர்ந்து பேசிய தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், 'காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், இனிமேல் ஒரு உயிரிழப்பு கூட இங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை' என தெரிவித்தார்.

இந்த பயங்கரமான விபத்து குறித்து சுகந்தி என்ற பயணி பேசுகையில், 'வழக்கறிஞராக உள்ள தான், வழக்கு ஒன்று தொடர்பாக கடலூர் நீதிமன்றம் செல்வதற்காக பேருந்தில் பயணித்து வந்ததாகவும், அப்போது தான் பயணித்த பேருந்தும் எதிரே வந்த பேருந்தும் அதிகமான வேகத்தில் வந்ததாக கூறினார். மேலும், மழை பெய்திருந்த நிலையில் இரண்டு பேருந்துகளிலும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன என்றார்.

இதனால், தானும் சில காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினேன் என்றார். குறிப்பாக, இரண்டு பேருந்துகளிலும் வேகம் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்குமாயின் இந்த விபத்தை நடக்காமல் தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, பேருந்தின் நின்ற படி பயணித்த தான் விபத்தின் போது பேருந்தின் முன்புறம் விழுந்த நிலையில், ஒருவர் தன்னை தூக்கி காப்பாற்றியதாகவும் கூறினார்.

இத்தகைய விபத்துகளை இனிமேல் நடக்காமல் இருக்க, பேருந்துகள் குறைவான வேகத்தில் பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும்' என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் இது குறித்து பேசிய மற்றொரு பயணியான அஜித்குமார், 'சுகம் என்ற தனியார் பேருந்தில் தான் பயணித்த போது, அப்பேருந்து மற்றொரு பேருந்துடன் நேருக்கு நேராக மோதியதாகவும், இந்த பயங்கர விபத்தில் பலருக்கும் படுகாயம் ஏற்பட்டதாகவும்' தெரிவித்தார்.

மற்றொரு பயணி பேசுகையில், பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தாகவும், அப்போது மற்றொரு பேருந்து வந்து தங்களது பேருந்து மீது நேருக்கு நேராக மோதியதாகவும் பதற்றத்துடன் பேசினார். மேலும், தனக்கு நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில், தனது ஒரு பிள்ளையை இந்த விபத்தில் பறிகொடுத்து விட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிங்க: Cuddalore Bus Accident: தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - பலி 5 ஆக அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.