கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி இம்மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுதால் நீர் கரைபுரண்டு கல்லனை, கீழணை நோக்கி வந்தது. இந்த நீரின் அளவு கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் 5 அடியை எட்டியதும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 737 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 46.61 அடியை எட்டிய கடல் போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் சென்னைக்கு கூடுதலாக வினாடிக்கு 48 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.