ETV Bharat / state

பேராசிரியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை - jewel theft

கடலூரில்: பேராசிரியர் வீட்டில் 27 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பேராசிரியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
author img

By

Published : Jul 3, 2019, 6:29 PM IST

கடலூர் மாவட்டம் கோண்டூரை சேர்ந்தவர் செல்வராஜ்(54). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும், இவருடைய மனைவி அல்லி, புதுச்சேரியில் உள்ள போப் ஜான் பால் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்று விட்டனர்.

இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 26 பவுன் நகை மற்றும் ரூ.43 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

பேராசிரியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை

இதுகுறித்து தகவலறிந்து வந்த புது நகர் காவல்துறையினர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு கைரேகை நிபுணர் அருண் தலைமையில் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கடலூரில் பேராசிரியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை மர்ம நபர் கைவரிசைBody:கடலூர்
ஜூலை 3,

கடலூரில் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் கோண்டூரை சேர்ந்தவர் செல்வராஜ் 54 இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் மற்றும் இவருடைய மனைவி அல்லி புதுச்சேரியில் உள்ள
போப் ஜான் பால் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றனர் பின்னர் மாலை வீட்டுக்கு வந்து திரும்பி பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்தன மேலும் பீரோவில் இருந்த 26 பவுன் நகை மற்றும் 43 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது இதனைத்தொடர்ந்து புதுநகர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த புது நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால் சுதர் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர் கைரேகை நிபுணர் அருண் தலைமையில் தடயங்களை சேகரித்து வந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் பட்டப்பகலில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.