கடலூரில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் 410 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று மேலும் 217 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 227ஆக உயர்ந்துள்ளது. இதில், ஆயிரத்து 711 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 105 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சிகிச்சை பலனின்றி 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் இரண்டு நபர்கள் உயிரிழந்தனர்.