கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 1) வரை கரோனா தொற்றால் மூன்றாயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) மேலும் 144 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றாயிரத்து 409ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஆயிரத்து 229 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை ஆயிரத்து 898 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இன்று மேலும் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 948ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சிகிச்சைப் பலனின்றி 44 பேர் உயிரிழந்தனர். அதில் இன்று மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர், விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர்.