கரோனா நோயாளிகளை கையாள தமிழ்நாடு முழுவதும் 500 ஆம்புலன்ஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் முதற்கட்டமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு 108 எண்ணிக்கை கொண்ட ஆம்புலன்ஸை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளைக் கையாள ஐசியு வசதி கொண்ட 10 புதிய ஆம்புலன்ஸ் சேவையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (செப்டம்பர் 4) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திருநங்கையுடன் காதல்' - பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்!