ETV Bharat / state

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை: அடித்து நொறுக்கிய இளைஞர்கள்!

author img

By

Published : Oct 16, 2019, 7:54 AM IST

கோவை: சவுக்குத்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்த அரசு மதுபான பாட்டில்களை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்.

மதுபாட்டில்களை உடைக்கும் இளைஞர்கள்

கோவை மாவட்டம், செங்கத்துறையில் இருந்து தேவராயாம்பாளையம் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுவந்தன. இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் சூலூர் காவல் துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் வந்த காவலர்கள் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்களை உடைக்கும் இளைஞர்கள்

இந்நிலையில், சவுக்குத்தோப்பு பகுதியில் மீண்டும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் மதுபாட்டில்களை அடித்து உடைத்தனர்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 195 மதுபாட்டில்கள் பறிமுதல்!

Intro:கோவை அருகே சவுக்குத்தோப்பு என்ற இடத்தில் கள்ளச்சந்தையில் விற்கப்படும் அரசு மதுபான பாட்டில்கள் ,அடித்து உடைத்த கிராம இளைஞர்கள்..
Body:கோவை மாவட்டம் செங்கத்துறையில் இருந்து தேவராயாம்பாளையம் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தன. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சூலூர் காவல் துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் வந்த காவலர்கள் மது பாட்டிலை பறிமுதல் செய்து சென்றனர். இந்நிலையில் சவுக்குத்தோப்பு என்ற இடத்தில் , மீண்டும் கள்ளச்சந்தையில் மது விற்பனையை பழனிச்சாமி மற்றும் மணி இருவரும் இன்று விற்று கொண்டிருந்தனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் மூப்பதுக்கும் மேற்பட்ட குவார்ட்டர் மது பாட்டில்களை பாறையில் வீசி உடைத்தனர். இந்த கள்ள மதுபான கடையால் ஊருக்குள் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் எனத்தெரியவில்லை எனவும், குடித்து விட்டு சாலையில் சண்டை போடுவது, திருட்டு குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும் , குடித்துவிட்டு யாரும் வேலைக்கு யாரும் சரிவர வருவதில்லை என குற்றம் சாட்டினார்.இக்கடைகளை மூடக்கோரி தமிழக முதலமைச்சர் முதல் அனைத்து தரபுக்கு புகாரளித்தும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மதுபானங்களை அடித்து நொறுக்கியதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.