கோவை செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பனமரத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இன்று காலை அவ்வழியாக சென்ற மக்கள் அதைக் கண்டு செல்வபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞரிடமிருந்த அடையாள அட்டையைக் கொண்டு அவர் பெயர் ரமேஷ்(30) என்பதையும், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதையும் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இவர் அங்கு தனியாக வீடு எடுத்து தங்கியிருப்பதும், கஞ்சா விற்பனை செய்பவர்களிடம் அதிகமாக தொடர்புகொண்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும், காவல்துறையினர் இவர் எப்போது கோவைக்கு வந்தார், எத்தனை நாட்களாக தங்கி இருக்கிறார், எங்கு வேலை செய்து வருகிறார் என விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கோயில் வளாகத்திலேயே நடந்த இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியேற்ற முயன்ற மனைவி, மகனை வெட்டிய தந்தை!