பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் மகன் அபு என்கிற இப்ராஹிம். இவர் அப்பகுதியில் அடிதடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு காவல் துறையினர், அவரைக் கைது செய்தனர். தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு நன்னடத்தையின்பேரில் தன்னை விடுவிக்கும்படி இப்ராஹிம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற பொள்ளாச்சி துணை ஆட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர் தணிகைவேல் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி, அவருக்கு நிபந்தனை பிணை அளித்தனர். ஆனால், நிபந்தனை பிணையில் வெளிவந்த அவர் மீண்டும் வழக்கம்போல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடத்தொடங்கியுள்ளார்.
இதனால் இவர் மீண்டும் தொடர்ந்து இதே போன்று பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவார் என்று வருவாய்த்துறை, காவல் துறை அலுவலர்கள் இணைந்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்தனர். அதன்படி காவல் துறையினர் இப்ராஹிமை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: