கோவை மாவட்டம், சூலூர் அருகிலுள்ள பூரண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி,38, ஊரடங்கு அமல்படுத்தியலிருந்து வீட்டிலிருந்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களாக தனக்கும் கரோனா வைரஸ் தொற்று வந்து விட்டது என்று அடிக்கடி தனக்குத் தானே பேசி கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து அவரை அவரின் மனைவி சுதா, தம்பி மகன் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது செஞ்சேரிமலை பகுதியில் வாகனத்தை நிறுத்திய நிலையில், பழனிசாமி அருகில் ஓடி கொண்டிருந்த பிஏபி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரின் உடலானது நீரில் அடித்துச் செல்லப்பட்டு சுல்தான் பேட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பழனிச்சாமியின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில், சுல்தான் பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராஜசேகரன் காலமானார்