கோயம்புத்தூர்: கணபதி பகுதியில் வாடகை வீட்டில், பிரதீப் (24) என்ற இளைஞர் தனியாக வசித்துவந்தார். இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, தனது சொந்த ஊரான கும்பகோணத்திலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர் கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில் நேற்று (ஜூன் 18) இரவு காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலத்தின் மேலிருந்து விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், பின் அவரை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதனிடையே அவர் வைத்திருந்த சில ஆவணங்கள் மூலம் அவர் பணிபுரியும் நிறுவனத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த பிரதீப் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ரத்தினபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவ்விசாரணையின்போது, கடந்த இரு மாதங்களாகவே பிரதீப் மன உலைச்சலிலிருந்ததாகவும்; அதன் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அப்பா சாவுக்கு நான் காரணமா? குற்ற உணர்ச்சியில் மகன் தற்கொலை!