பொள்ளாச்சி: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கான நேர்காணல் நேற்று (ஜன.9) தொடங்கியது. அந்த வகையில், கோவை மாவட்டம் ஆனைமலை தாலுக்காவில் விண்ணப்பிருந்த 262 பேருக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றுவருகிறது.
தேவிபட்டிணம், குப்புச்சி புதூர், சுப்பைய கவுண்டன்புதூர் ஆகிய பகுதியில் கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இதனை நிரப்பும் வகையில், அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு தேர்வு நடத்த உத்தரவிட்டது. பெண்கள், இளைஞர்கள் விண்ணப்பம் செய்து தேர்வு எழுதினர். அதன்பின் அவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், ஆனைமலை வட்டாட்சியர் ரேணுகாதேவி தலைமையில் 171 நபர்களுக்கு நேர்முக தேர்வு நேற்று (ஜன.9) நடைபெற்றது. மீதமிருக்கும் நபர்களுக்கு இன்று(ஜன.10) நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. நேற்றைய தேர்வில் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் வாசுதேவன், துணை வட்டாட்சியர் அனுசியா கலந்து கொண்டனர். நேர்காணலுக்கு வந்த பெண்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அலுவலக வளாகத்தில் அதிகாரிகள் முன்பு பெண்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர்.
இதையும் படிங்க:Chennai Theft: பட்டப்பகலில் வீட்டில் கொள்ளையடித்த சினிமா மேக்கப் ஆர்டிஸ்ட் கைது