ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கோவை: இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Accident in coimbatore
Accident in coimbatore
author img

By

Published : Oct 17, 2020, 4:42 PM IST

கோவை மாவட்டம் சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி (70). இவரது மனைவி வள்ளியம்மாள் (63). இவர்களது மகன் விசைத்தறி உரிமையாளர் தங்கராஜ் (45). இவரது மகன் விஜய் ஆனந்த் (17).

இந்நிலையில் வள்ளியம்மாள் இன்று காலை தனது பேரன் விஜய் ஆனந்துடன் கருமத்தம்பட்டியில் நடைபெறும் ஆதார் அட்டை திருத்தச் சிறப்பு முகாமுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சோமனூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, தூத்துக்குடியிலிருந்து கோவையை நோக்கி வந்துகொண்டிருந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வள்ளியம்மாள் லாரியின் சக்கரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது பற்றிய தகவலறிந்து வந்த காவல் துறையினர் வள்ளியம்மாள் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் லாரியை தூத்துக்குடியைச் சேர்ந்த அசோக்குமார் (29) என்பவர் ஓட்டிவந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வங்கி ஊழியர் உள்பட இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.