கோவை: இராமநாதபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அக்ஷய். இவர் சட்டம் படிப்பு முடித்துப் பின்னர் வழக்கறிஞராக பயிற்சி எடுத்து வந்தார். இவருக்கும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் அனு தர்ஷினி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் அக்ஷயின் மனைவியான அனு தர்ஷினி கல்லூரியில் படித்து வந்து உள்ளார்.
இதனால் ஈரோட்டில் உள்ள அவரது தாய் வீட்டிலேயே அனு தர்ஷினி தங்கி படித்து வந்து உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில் வழக்கறிஞர் அக்ஷய், பின் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பெற்றோர் தங்கள் மகன் இறப்பிற்கு நியாயம் வேண்டி காவல் துறையிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அக்ஷயின் பெற்றோர் தங்களது மகன் தற்கொலைக்கு அனு தர்ஷினி தான் காரணம் என சந்தேகம் இன்றி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மேலும் தங்களது மகனின் தற்கொலைக்கு காரணமான அனு தர்ஷினி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அளித்த புகாரில் குறிப்பிட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: டிராலி பேக்கில் ஓட்டல் அதிபர் உடல்.. கேரள காதல் ஜோடி சென்னையில் கைது.. பகீர் பின்னணி என்ன?
அக்ஷயின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனு தர்ஷினியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் கணவரை தற்கொலைக்கு தூண்டி உள்ளாரா? என அறிவதற்காக அனு தர்ஷினி மீது பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் விசாரணையை தீவிரப் படுத்திய நிலையில், அனு தர்ஷினி முன்னுக்குப்பின் முரணான பல கருத்துக்களை போலீஸாரிடம் தெரிவித்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் தற்கொலைக்கு காரணம் அனு தர்ஷினி தான் என்பதற்கு முகாந்திரம் இருப்பதாக கருதப்பட்டுள்ளது- ஆதலால் அனு தர்ஷினியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் பின், கோவை சிறையில் அடைத்து உள்ளனர். மனைவி அடிக்கடி சண்டையிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், கணவனை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கு - தமிழ்நாடு விடுதலை படையைச் சேர்ந்த 11 பேரின் தண்டனை குறைப்பு!