ETV Bharat / state

காட்டு ராஜாக்களை அழிப்பது காட்டை துண்டாடுவதற்கு சமம்!

author img

By

Published : Jun 28, 2020, 7:06 PM IST

ஒரு வனத்திற்குள் அமைக்கப்படும் சாலை வணிகத் தொடர்பை அதிகரிக்கலாம் என்பது வெளிப்படையான விளக்கம். ஆனால் யானைகளின் வலசைப்பாதைகள் அழிக்கப்பட்டு காடு துண்டாடப்படுகிறது என்பதே நிதர்சனம். ஒரு யானை அழிவது என்பது ஒரு காட்டின் அழிவின் அறிகுறி. பெருமுதலாளிகளுக்கும், வன உயிரினங்களுக்கும் இடையே சிக்கித் தவிப்பது எளிய மனிதர்களான விவசாயிகள்தாம். யானைகள் உயிரிழப்பு எங்கு முடியும்...என்று தணியும் மனிதர்களின் சுயநலம்...

காட்டு ராஜாக்களை
காட்டு ராஜாக்களை

’மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என எழுத்தாளர் ஜி.நாகராஜன் சொல்லும் கூற்றை, தன்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறான், நிகழ்கால மனிதன். பிறர் உயிரினங்களை வதைத்து அதில் இன்பம் காணும் மனிதனை வேறெப்படி வகைப்படுத்தமுடியும்.

வனத்திலிருந்து ஒருமுறை வனவிலங்குகள் வெளியேறுகிறது என்றால் அதன் பிறகான நாள்களில் அவற்றின் நிலை வாழ்வோ? சாவோ என்றாகிவிடுகிறது. இந்தியாவில் யானைகளுக்கு 101 வலசை பாதைகளும், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 16 வலசை பாதைகளும் உள்ளன. உணவுக்காக யானைகள் கி.மீ கணக்கில் பயணிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் வலசைப்பாதைகளை மனிதனின் ஆக்கிரமித்துவிட்டு, அப்பகுதியில் நுழையும் யானைகளை அத்துமீறி நுழைவதாக மனிதன் வரையறுக்கிறான். இதில் அடிப்படை அறம்கூட கிடையாது.

வெடிகுண்டுகள்
வெடிகுண்டுகள்

உணவிற்காக யானைகள் விளைநிலங்களை நாடும்போது மனித - விலங்கு மோதல் தொடங்குகிறது. கோவை மாவட்டத்திலும், யானை-மனிதன் மோதலுக்கு பஞ்சமில்லை. கடந்த 6 மாதங்களில் 11 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்து 113 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், 2010 - 2015ஆம் ஆண்டுக்குள் 22 யானைகள் மின்வேலியிலிருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன.

யானைகளின் அவசியம்

கேரள மாநிலத்திலிருந்து நீலகிரியில் உள்ள தமிழ்நாடு -கேரளா- கர்நாடகா வனப்பகுதிகள் இணையக் கூடிய முத்தங்கா புலிகள் காப்பகம் வரை யானைகள் வலசையாகச் செல்கின்றன. இந்த இடம்பெயர்தலின்போது மரங்களின் தளைகள், கனிகள் என உண்டு பசியாறும் விலங்குகள் அதன் விதையை வழி நெடுகிலும் எச்சங்களாக விதைத்துச் செல்கின்றன. இது வனத்தை இன்னும் வனப்பாக மாற்றுகிறது.

பெரும்பாலான யானைகள் கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதி வழியாக பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் முகாமிட்டு தங்கியிருக்கிருக்கும்.

இந்த வருட தொடக்கத்திலிருந்து சிறுமுகை வனப்பகுதியில் 6 யானைகள், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, போளுவாம்பட்டி மற்றும் கோவை வனச்சரகங்களில் 5 யானைகள் உள்பட 11 யானைகள் உயிரிழந்துள்ளன.

யானைகளின் மரணம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல என விளக்குகிறார், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன். அவர் கூறுகையில், “இந்தியாவில் சுமார் 27 ஆயிரம் யானைகள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 3 ஆயிரம் ஆண் யானைகள் மட்டுமே உள்ளன என்பது வெளிச்சமாகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் நான்கு ஆண் யானைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் சுற்றுச்சூழலில் சமநிலை குலைக்கப்படலாம்.

சாதாரணமாக வறட்சி காலத்தில் யானைகள் இயற்கையாக உயிரிழப்பது இயல்பு. ஆனால் தற்போதைய உயிரிழப்புகள் மின்வேலிகள், நாட்டுவெடிகளில் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இதனை ஆராய்ந்து யானைகளின் உயிரிழப்பை தடுக்க வேண்டும். இது தவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு வகையான கட்டிடங்களில் இருந்து வரும் கழிவு நீர் மழைக்காலங்களில் வனப்பகுதியில் சேருகிறது. இதை அருந்தும் யானைகள் உயிரிழக்கும் சூழலும் நிலவிவருகிறது. யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதைக் கண்காணிக்கவும் ஒரு குழுவை அமைக்கவேண்டும்” என்றார்.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

கோவை வன உயிரின பாதுகாப்பு அமைப்பின் தலைவர் முருகானந்தம் கூறுகையில், “ யானைகளின் இறப்பு காரணங்களை துல்லியமாக கண்டறிய இறந்த யானைகளின் உடற்கூறாய்வு முடிவுகள் விரைவில் கிடைக்க வேண்டும். சில நேரங்களில் அவை கிடைப்பதேயில்லை. இதன் காரணமாக யானைகளின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதில் சிக்கல் உண்டாகிறது. இறந்த யானையின் உடற்பாகங்களை சோதனைக்கு உள்படுத்தி அதன் முடிவுகள் உடனடியாக கொடுக்கப்பட்டால் அதன் காரணத்தை கண்டறியலாம். இதன் மூலம் வரும் காலங்களில் உயிரிழப்பைத் தடுக்கமுடியும்” என அழுத்தமாகக் கூறினார்.

காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்படும் அவுட்டுக்காயில் (நாட்டு வெடிகுண்டு) யானைகள் தவறுதலாக உயிரிழக்கின்றன என தனியார் எஸ்டேட் முதலாளிகளும், தோட்டம் வைத்திருப்பவர்களும் தெரிவிக்கின்றனர். யானைகள் தவறுதலாக உயிரிழக்கின்றன என விட்டுவிடும் பட்சத்தில் காட்டுப்பன்றிகளின் உயிருக்கு மதிப்பு இல்லாமல் போகிறது.

மனிதன் உயிரினங்களுக்கு தனக்களிக்கும் பயனைப் பொறுத்து மதிப்பளிக்கலாம், ஆனால் இயற்கை அப்படியல்ல, உணவுச் சங்கிலியில் காட்டுபன்றியும், யானையும், மனிதனும் ஒன்றுதான் என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்துக் கொள்ளமுடியும்.

’காட்டுக்கு ராஜாவைப் போல மிடுக்குடன் இருக்கும் ஒரு யானை உயிரிழப்பது என்பது ஒரு காடு அழிவதின் அறிகுறி’ என்றே சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு வனத்திற்குள் அமைக்கப்படும் சாலை வணிகத் தொடர்பை அதிகரிக்கலாம் என்பது வெளிப்படையான விளக்கம். ஆனால் விலங்குகளின் வலசைப்பாதைகள் அழிக்கப்பட்டு காடு துண்டாடப்படுகிறது என்பதே நிதர்சனம்.

இதையும் படிங்க: விற்காமல் கிடக்கும் கோரைப் பாய்கள்... பயிரை நடலாமா? வேண்டாமா? - கலங்கும் காவிரி விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.