கோயம்புத்தூர்: நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் நவீன் (27). இவர் தனது நண்பர்களுடன் தெருவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சையது அலி, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வீட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இளைஞர்களுக்கும், உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறபடுகிறது. இந்நிலையில் நவீன் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், மாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பேசும் வசனமான, "இந்த ஏரியா வேணா உன் கண்ட்ரோலில் இருக்கலாம், ஆனால் நான் ஆட்டோக் கண்ட்ரோல் செஞ்சிருவேன்" என்ற வசனத்தை வைத்துள்ளார்.
![எஸ்ஐ குறித்து ஸ்டேட்ட்ஸ் வைத்த இளைஞர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14830306_st.jpg)
மேலும் அந்தச் ஸ்டேட்டஸில் "dedicate to pothanur station puthu SI" என குறிப்பிட்டுள்ளார். இதனை சிலர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து உதவி ஆய்வாளர் சையது அலிக்கு அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர், நவீனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
![நவீன் வைத்த ஸ்டேட்டஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14830306_ou.jpg)
இதனால் மனமுடைந்த நவீன், வீட்டில் இருந்த சானிபவுரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த பெற்றோர் நவீனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நவீனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்...! சீர்கெட்டுத் திரியும் இளைஞர்கள்