ETV Bharat / state

'கோவையில் 1880 வாக்குச் சாவடியில் வெப் கேமரா'-ராசாமணி - 2019election

கோவை: நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக கோவையில் உள்ள 1880 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராசாமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி
author img

By

Published : Apr 17, 2019, 3:22 PM IST

நாளை மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டத்தில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராசாமணி முன்னிலையில் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் நடத்தும் அலுவலர் ராசாமணி கூறுகையில், "கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 470 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதலாக காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1880 வாக்கு சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயதிரங்கள் மற்றும் தேர்தலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டு சேர்க்கும் பணி இன்று மாலைக்குள் நிறைவடையும்" என தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.         கோவை

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு, கேரளா எல்லைப்பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட், மை, எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் துணை இராணுவ படையினர் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான பொருட்கள் அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 470 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை எனவும் கூறிய அவர், பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக மெக்ரோ அப்ரசவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 1880 வாக்கு சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளன எனவும், வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் அலுவலர்கள், வாக்கு பதிவு இயந்திரம் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் இன்று மாலைக்குள் நிறைவடையும் எனவும் அவர் கூறினார். மாற்று திறனாளி வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்கு சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும், மாற்று திறனாளிகளுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன எனவும் கூறிய அவர், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க டோக்கன் வசதி செய்யப்படும் எனவும், வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு செய்ய 20 சதவீத கூடுதல் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். தேர்தல் சுதந்திரமாக, நேர்மையாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு, கேரளா எல்லைப்பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Video in reporter app
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.