கோவை விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர்,’’கோவை மட்டுமல்ல, எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவை என்றாலே பரபரப்பு என்று இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்.
கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதான் ஆக வேண்டும். தமிழக அரசின் NIA கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று இருக்கின்றது. ஒரு உத்தரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்குத் தமிழக அரசு செயல் பட வேண்டும். கோவை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து இருக்கின்றது. ஏன் இப்படி நடந்தது என்பதை காவல்துறை பார்க்க வேண்டும்.
NIA மட்டுமல்ல, தமிழ்நாடு காவல் துறையும் கோவை சம்பவத்தில் கவனமுடன் இருந்து இருக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் என்று மேலோட்டமாக சொன்னார்கள், பின்னர் அது வேறு விதமாக மாறியது. ஒருத்தர் மேல் கவனத்தைச் செலுத்தாமல் முற்றிலும் பாதுகாப்பைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குண்டு வெடித்ததை பா.ஜ.க சொல்லித்தான் பீதி அடையனுமா? மக்கள் எல்லோரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இத்தகைய கருத்துகள் வரும் போது எச்சரிக்கையாக இருக்க கோவையில் பாஜக பந்த் நடத்துவது என்பது போராட்ட வழிமுறை. இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக, எதிர்ப்பை தெரிவிக்க நடத்துவது.
கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. அமைதியான நிலையில் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் முறைதான் பந்த் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம் என தெரிவித்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர் அரசியல்வாதிகள் நாகரீகமாகப் பதிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்கள் உடன் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். தமிழ், தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை’’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி