கோவை மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இருதினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் கோவை குற்றாலத்திலிருந்து நீர் வந்ததால் பேரூர், படித்துறை பகுதிகளில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது.
மேலும் தொடர்ந்து இருதினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சாடிவயல், சிறுமுகை பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.