கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானை விநாயகனை வனத்துறை அலுவலர்கள் பிடித்து முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகுள் விட்டனர்.
இந்நிலையில் தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் காட்டு யானை விநாயகன் நாகம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியுள்ளது.
மேலும் காட்டு யானை விநாயகன் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வந்து செல்லும் காட்சி முதன்முறையாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விநாயகன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறை தரப்பில் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.
தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானை விநாயகனை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று முதுமலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊர் மக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காட்டு யானை விநாயகனை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.