இது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கூறுகையில்,"கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்கப்பட்ட ஜெயசீலன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக பேசினார்.
அதேபோல், மாவட்ட நிர்வாகிகள் மீதும் அவதூறாக பேசி வருகிறார். எனவே அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யிடம் சில ஆதாரங்களை காண்பிக்க வேண்டும்: விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் நிர்வாகிகள்