கோயம்புத்தூர்: விஜய் ரசிகரும் தன்னார்வலருமான நவீன் ரோஷன், போத்தனூர் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி இல்லத்தில் வசித்து வரும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளை, தனது சொந்த செலவில் அழைத்து வந்து போத்தனூர் பகுதியில் உள்ள அரசன் திரையரங்கில் பீஸ்ட் படம் பார்க்க வைத்துள்ளார். படம் ஆரம்பித்து திரையில் விஜய்யை பார்த்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் தன்னை மறந்து சந்தோசமாக கை தட்டி மகிழ்ந்தனர்.
மேலும், பொதுவாக திரைப்படம் வெளியாகும்போது கட்டவுட் வைத்து கொண்டாடுவதை, இது போன்று திரையரங்கில் திரைப்படங்களை பார்க்க வாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளை படத்திற்கு அழைத்து வருவதை தான் நடிகர் விஜய் விரும்புவார் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Video: 'நான் பாஜக-வே கிடையாதுங்கோ..! : குமுறும் பாக்கியராஜ்