ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அலுவலர் கைது - திடீர் சோதனையில் சிக்கினார் - vigilance raid

கோவை: கோவை வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மாநகராட்சி உதவி ஆணையர் வசமாக சிக்கியுள்ளார்.

கோவை
author img

By

Published : May 27, 2019, 9:54 PM IST

கோவை வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையர் ரவிக்குமார். இவர் பணியின்போது லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் சோதனை

இதனைத் தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணபதி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் வீட்டு வரி தொடர்பான நகல் வழங்கிட 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது உதவி ஆணையர் ரவிக்குமார் கையும் களவுமாக பிடிபட்டார். இவருக்கு உதவியாக இருந்த இடைத்தரகர் குணசேகரன் என்பவரும் சிக்கியுள்ளார்.

இதையடுத்து, இருவரிடமும் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், இருவரையும் கைது செய்தனர்.

Intro:கோவையில் வரிப் புத்தகம் வழங்க 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி ஆணையரை பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Body:கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உதவி ஆணையராக இருந்து வருபவர் ரவிக்குமார் இவர் பணியின்போது தொடர்ச்சியாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் 3 ஆய்வாளர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்போது கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரிடம் வீட்டிற்கான வரி புத்தகம் வழங்க 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது உதவி ஆணையர் ரவிக்குமார் கையும் களவுமாக பிடிபட்டார் இவருக்கு உதவியாக இருந்த இடைத்தரகர் குணசேகரன் என்பவர் பிடிபட்டார் இதனைத் தொடர்ந்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.