வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்ததற்கு தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் சிலையை உடைத்த வெறியர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து பின் விடுதலை செய்தனர்.