ETV Bharat / state

பாடங்களுடன் சேர்த்து காய்கறி வேளாண்மை பயிற்சி: அடடே முயற்சி!

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு பாடங்களுடன் சேர்த்து காய்கறி விவசாயம் குறித்தும் பயிற்சி அளித்துவருகிறது.

kovai
kovai
author img

By

Published : Jan 31, 2020, 12:22 PM IST

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே செயின்ட் ஜான்ஸ் என்னும் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. சுமார் 820 மாணவ, மாணவிகள் பயின்றுவரும் இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களுடன், காய்கறி விவசாயம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

பள்ளி வளாகத்தில் காய்கறி செடிகள் வளர்க்கும் பொறுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு செடி வழங்கப்பட்டு அதனை வளர்க்கப் பயிற்சி அளிக்கப்படும்.

காய்கறி விவசாயம் செய்யும் பள்ளி மாணவர்கள்

செடிகளில் வளரும் காய்கறிகளை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதால், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் செடி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். வேளாண்மைப் பிரிவில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருப்பதாகவும் வேளாண்மை பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களுக்கு இளம் பருவத்திலேயே வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தப் பள்ளியை பெற்றோர்களும், அப்பகுதி விவசாயிகளும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

பள்ளி முதல்வர் பாஸ்கர்

இது குறித்து பள்ளி முதல்வர் பாஸ்கர் தெரிவிக்கையில், மாணவ, மாணவிகளுக்கு விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பள்ளியிலேயே விதைகள் வங்கி வைத்து அதனை இலவசமாகத் தேவைப்படுவோருக்கு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

விவசாயம் மழுங்கிவரும் நிலையில் அதன் முக்கியத்துவம் குறித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் பள்ளியை பாராட்டியாக வேண்டும்.

இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் கோரைப் புல் விவசாயம்: சிறப்புத் தொகுப்பு!

Intro:tn_cbe_01_agricultural_school_special_story_visu_7208104

Body:tn_cbe_01_agricultural_school_special_story_visu_7208104

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.