ETV Bharat / state

ஒரே நாடு ஒரே அரசியல் ஆபத்தானது - திருமாவளவன் - ஒரே நாடு ஒரே அரசியல் ஆபத்தானது

ஒரே நாடு ஒரே அரசியல் என்பது ஆபத்தானது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக திருமாவளவன்
விசிக திருமாவளவன்
author img

By

Published : Mar 27, 2022, 10:54 PM IST

கோயம்புத்தூர்: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 'இறைவேதம் அழைக்கிறது' என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்ட திருக்குர்ஆன் புத்தக வெளியீட்டு விழா இன்று(மார்ச் 27) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அந்த அமைப்பின் தேசிய தலைவர் பாக்கர் புத்தகத்தை வெளியிட திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனின் சாதிப் பெயரை சொல்லி இழிவு படுத்தியதால் அந்த மாணவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலையால் உயிரிழந்தார்.

தமிழ்நாடு அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி மாணவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும்.

மக்கள் பாஜகவை புரியத் தொடங்கிவிட்டார்கள்

முதலமைச்சரின் துபாய் பயணத்தை சிலர் உள்நோக்கத்தோடு விமர்சிப்பதை கைவிட வேண்டும். ஹிஜாப் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கூறியது மட்டும் தீர்ப்பு ஆகாது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.

மக்கள் பாஜக வேறு, இந்து சமய நம்பிக்கைகள் வேறு என்பதை புரியத் தொடங்கிவிட்டார்கள். இந்து சமயத்தைப் பற்றி தெரிந்து கொண்டாலே நாட்டில் பிரச்சினைகள் ஏற்படாது. இந்திய அரசு தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் நமது மீனவர்கள் மீது சிறப்பு கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்திய அரசு அவர்களை அகதிகள் என்ற முறையில் வரவேற்று உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கிறது. மக்களும் அந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஒரே நாடு ஒரே அரசியல் என்பது ஆபத்தானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.