ETV Bharat / state

’உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான்..!’ : ’உதய்ணா’விற்காக விதவித போஸ்டர் ஒட்டிய உடன்பிறப்புகள்! - நெஞ்சுக்கு நீதி

கோவையில் நடிகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ வெளியாகவிருக்கும் நிலையில், பல்வேறு வேடிக்கை டிசைன்களில், பல வாசகத்துடன் உதயநிதிக்கு போஸ்டர் ஒட்டி வருகின்றனர், கோவையின் உடன்பிறப்புகள்.

’உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான்..!’ : ’உதய்-னா’விற்காக விதவித போஸ்டர் ஒட்டிய உ.பி- கள்

author img

By

Published : May 20, 2022, 10:54 PM IST

நடிகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் இன்று(மே 20) வெளியாகியுள்ள நிலையில், கோவையில் உதயநிதி நற்பணி மன்றம் சார்பில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவையில் இத்திரைப்படம் வெற்றியடைய பல்வேறு இடங்களில் உதயநிதி நற்பணி மன்றம் சார்பிலும், திமுக கட்சியினர் சார்பிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை ரயில் நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் "கலைஞர் ஐயாவின் பராசக்தி, தளபதியாரின் ஒரே ரத்தம் வரிசையில் சமூக நீதி பேசும் சின்னவரின் நெஞ்சுக்கு நீதி" என்ற வசனத்துடனும், இராமநாதபுரம் பகுதியில் மேலும் ஒரு படி ஏறி பாகுபலி வேடத்தில் உதய்-ணா தலையை கிராஃபிக்ஸ் செய்து "உதயநிதி ஸ்டாலின் MLA ஆகிய நான்" என்ற வாசகத்துடனும் சுவரொட்டிகள் ஒட்டி அட்ராசிட்டி செய்து வருகின்றனர், கோவையின் உடன்பிறப்புகள்.

இதையும் படிங்க: கோவை தொல்பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்து வியந்து ரசித்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.