கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசனும், அதிமுக வேட்பாளராக அன்னம் அர்ஜுனனும் போட்டியிட்டனர்.
அதில் வானதி சீனிவாசன், தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு கோயிலுக்குச் சென்றபோது, அங்கு பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுகவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏழு பேர் விடுதலை
இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஆதிநாராயணன் அளித்த புகாரின் பேரில் பெரியகடைவீதி காவல் துறையினர், வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகாராஜ், சண்முகசுந்தரம், பாபு ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு கோயம்புத்தூர் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று (நவ. 26) குற்றம்சாட்டப்பட்ட வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்து நீதிபதி அப்துல் ரகுமான் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் பயிற்சி வகுப்பு