இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொங்கு மண்டலத்திற்கு மிக அதிகமான திட்டங்களை கொண்டு வருவதற்காக பல்வேறு திட்டங்களில் முன்னெடுப்பும் செய்திருக்கின்ற.எஸ்.பி வேலுமணி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக செயல்பட்டு வந்தது . குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எஸ்பி வேலுமணி மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார் . நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் எஸ்.பி.வேலுமணியின் அரசியல் வாழ்க்கையை முடிப்போம் என தேர்தல் பிரசாரத்தின் போது பேசி வந்தார்.
கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாத நிலையில். வன்மத்தின் காரணமாக ஒருவரால் புகார் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவருடைய வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையாகும் .
தேர்தலில் வருகின்ற வெற்றி தோல்விகளை என்றுமே நிரந்தரமாக்க முடியாது, இதை வைத்துக்கொண்டு அரசியல் எதிரிகளை பழி வாங்குகின்ற இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்
-
திரு @mkstalin அவர்களே!
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
அரசியலில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். @SPVelumanicbe @EPSTamilNadu @AIADMKOfficial pic.twitter.com/ZfRqpp6iZP
">திரு @mkstalin அவர்களே!
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 11, 2021
அரசியலில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். @SPVelumanicbe @EPSTamilNadu @AIADMKOfficial pic.twitter.com/ZfRqpp6iZPதிரு @mkstalin அவர்களே!
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 11, 2021
அரசியலில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். @SPVelumanicbe @EPSTamilNadu @AIADMKOfficial pic.twitter.com/ZfRqpp6iZP
உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும், அந்த வெற்றிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி என்ற காரணத்தினால் அவரை மன உறுதியை குலைப்பதற்காகவும், அவருக்கு தொடர்பு உடையவர் இடங்களில் சோதனை நடத்துவதன் மூலம் அவருடைய சுற்றுவட்டாரத்தை அச்சுறுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நம்புகிறோம் .
இதுபோன்ற அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கையை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்