ETV Bharat / state

'திமுகவில் திறமைசாலிகளுக்கு வாய்ப்பில்லை' - வானதி சீனிவாசன் எம்எல்ஏ தாக்கு - BJP VS DMK

திமுகவில் திறமைசாலிகளுக்கு இடமில்லை என்று சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 20, 2022, 6:46 AM IST

கோவை: செட்டி வீதி பகுதியில் பாலாஜி அவென்யூவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று (டிச.19) திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'இளைஞர்களுக்கு உடற்பயிற்சிக்கு கருவிகள் அமைத்து அரசின் சார்பில் பராமரிப்பது குறைவாக உள்ளது. கோவை மாநகர் முழுவதும் சாலைகள் மோசமாகி விட்டன.

மோசமான சாலைகள்: அதிகமாக மக்கள் பயன்படுத்தும் சலிவன் வீதி, செட்டி வீதிகள் கூட மோசமாக உள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பு போட்ட தண்ணீர் பந்தல் சாலைகள் மோசமாக உள்ளதப. மழைக்குப் பின்பு அந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு உள்ளாக பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும்.

தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பதா?: குடிநீர் பிரச்னைகள், சாக்கடை, சாலை எனப் பல பிரச்னைகள் உள்ளது. அரசாங்கம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர். அடுத்த வாரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகு பார்க்கிறார்.

'வாரிசு அரசியல்'-திமுகவில் பிறருக்கு வாய்ப்பில்லை: தன்னுடைய மகனை அமைச்சராக்கியதன் வாயிலாக குடும்பத்தின் கட்சியாக திமுக மாறியுள்ளது. ஜனநாயக அமைப்புகளில் குடும்ப அரசியலுக்கு இடமே இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சியாக திமுக இல்லை. ஒரு காலத்தில் இளைஞர்களை ஈர்த்த கட்சி திமுக. தற்போது புதியவர்களுக்கும், திறமைசாலிகளுக்கும் திமுக வாய்ப்பு கொடுக்கவில்லை.

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் பாஜக: பாஜகவின் அனைத்து கட்சி பொறுப்புகளும் குறிப்பிட்ட காலம் மட்டும் தான். பாஜக ஜனநாயக ரீதியாக செயல்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு குடும்ப அரசியல் பாதகமானது. பாஜக இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்கிறது.

மக்கள் பிரச்னையே இங்கு ஏராளாம்: அண்ணாமலையின் வாட்ச், சட்டை, பேண்ட், ஷூ குறித்த கேள்விகள் தேவையற்ற கேள்வி. மக்கள் பிரச்னையே 1,000 உள்ளது. எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுக பொதுவான அரசியல் கட்சியாக செயல்படுகிறதா? என்று தெரியவில்லை.

பாஜகவின் குரல் விவசாயிகளுக்கானது: அன்னூர் விவசாயி பிரச்சனையில் மாநில தலைவர் போராட்டம் நடத்தினார். விவசாயிகள் பிரச்சனைக்கு பாஜக குரல் கொடுக்கும். விவசாயிகளின் நிலத்தை பறிப்பது தவறு. பாஜக பின்னால் இருந்து எந்த அரசியலும் செய்யவில்லை. அன்னூர் விவகாரத்தில் விவசாயிகளுடன் அமைச்சர்கள் உட்கார்ந்து பேச வேண்டும்.

ஆமை வேகம் எதற்கு?: பாஜக அமைச்சர்கள் கூட்டத்தில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வருவதில்லை. தங்கச்சி, பையன், பேரன் என குடும்ப அரசியல் பாஜகவில் இல்லை. 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' ஏழு குளங்களை மையப்படுத்தியது. அப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. கோவை குளங்களில் கழிவுநீர் கலக்கிறது. கோவை மாநகராட்சியில் தூய்மை பணிகள் குடிநீர் வழங்குதல் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திமுகவுக்கு தைரியமிருந்தால் தொட்டுப்பாருங்க" - நாராயணன் திருப்பதி சவால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.