கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையை அடுத்த பெரியகல்லார் காவடிப்பாலம் அருகே, காயம் ஏற்பட்ட யானை குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மனோகரன், தங்கராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் நேற்று மாலை வாழைப்பழம், பொங்கல், ஆப்பிள், தர்பூசணி போன்ற பழவகைகளில் மாத்திரைகள் வைத்து அந்த யானைக்கு கொடுத்தனர்.
அதனைச் சாப்பிட தொடங்கிய யானை தற்போது உடல்நலம் தேறி வருவதாக வனத் துறையினர் கூறியுள்ளனர். இருந்தபோதிலும், காயம் அதிகமாக இருப்பதால் இன்னும் சில நாள்களில் சரியாகி விட வாய்ப்புள்ளதாகவுனம் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று காயமடைந்த நிலையில் உள்ள யானைகள் ஒத்துழைக்காது எனவும் இந்த யானை நன்கு பழகிவிட்டதால் மருந்து கெடுக்க சிரமமின்றி கவனிக்க முடிவதாகவும் மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டை உடைத்து தரைமட்டமாக்கிய ஒற்றைக் காட்டு யானை: விவசாயி காயம்