கோவை அடுத்து வால்பாறையிலிருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்து வந்தது. கரோனா மற்றும் ஆட்சிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் வால்பாறையிலிருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு மீண்டும் போக்குவரத்து சேவை ஏற்படுத்தக்கோரி, வால்பாறைப்பகுதி பொதுமக்கள் மற்றும் கேரள பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் (இன்று 20) புதன்கிழமை முதல் வால்பாறையிலிருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதனை வால்பாறை மற்றும் கேரள மாநிலத்தின் சாலக்குடி பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க:முத்திரை பதித்த கடந்த கால குடியரசுத் தலைவர்கள் - சிறப்பு தொகுப்பு