கோயம்புத்தூர்: வால்பாறை அடுத்த கக்கன் காலனி பகுதியில் உள்ள கட்டணக் கழிப்பிடம் கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கிவந்தது.
இதை நகராட்சி நிர்வாகம் பூட்டியதால், அப்பகுதியினர் இயற்கை உபாதைகளை பாதுகாப்பாக கழிக்க முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதைத் திறக்கும் நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாக எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளும் கழிப்பிடம் பயன்படுத்த வால்பாறை வரையில் பயணிக்க வேண்டியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து கழிப்பிடங்களையும், தூய்மைப்படுத்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி - தொடங்கி வைத்த முதலமைச்சர்!