ETV Bharat / state

வால்பாறை அருகே மாணவர்சேர்க்கை இல்லாததால் அரசுப்பள்ளிக்கு  மூடுவிழா - மாணவர்சேர்க்கை

கோவை:வால்பாறை அருகே இயங்கிவந்த பழமை வாய்ந்த அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டது.

govt school closed valparai
author img

By

Published : Aug 3, 2019, 6:59 PM IST

கோவை மாவட்டம், வால்பாறையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தேயிலை தோட்டத் தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். இவர்களில் படித்த சிலர் வேலைத்தேடி குடும்பங்களுடன் கோவை,பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்து விடுகின்றனர். இதனால் வால்பாறை பகுதிகளில் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டத்திற்குட்பட்ட சின்கோனா பெரியகல்லார் பகுதியில் 30-க்கும் குறைவான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்கும் வகையில், அரசு சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப பள்ளி ஒன்றையும் தொடங்கியது.

மூடப்பட்ட அரசுப்பளளி

ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கையை கொண்டிருந்த இந்தப் பள்ளியில் தற்போது, மாணவர்கள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டது. இதையறிந்த மாவட்ட கல்வித்துறை அங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல், பள்ளியையும் நிரந்தரமாக முடியுள்ளது. ஒரு மாணவர் சேர்க்கைக் கூட இல்லாததால் பள்ளியை மூடிவிட்டதாக மாவட்ட கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:schoolBody:schoolConclusion:

வால்பாறையில் மாணவ மாணவிகள் வராததால் பழமையான பள்ளிக் கூடம் மூடப்பட்டது.
வால்பாறை-3
வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டம் தொழில் மட்டுமே உள்ளதாலும்.வன விலங்குகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாலும். கல்லூரி படிப்பு படித்தவர்களுக்கு வேலைகள் இல்லாத சூழ்நிலைகள் இருப்பதால் வால்பாறை பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் கல்லூரி படிப்பை முடித்து வால்பாறை பகுதியே வேலை இல்லாத நிலையில் சம வெளியான கோவை பொள்ளச்சி .திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வேலை கிடைத்து செல்கிறார்கள் அப்படி செல்லும் மாணவ மாணவிகள் தாங்கள் பெற்றோர்களையும் அழைத்து செல்கிறர்கள் இதனால் வால்பாறை பகுதியில் மக்கள் தொகை குறைந்து வருகிறது.
தற்போது வால்பாறை பகுதியில் 84 பள்ளிகள் உள்ளன இதில் 2020 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் பல்வேறு பள்ளிகளில் குறைவான மாணவ மாணவிகள் உள்ளனர் .
வால்பாறை அருகே தமிழ் நாடு தேயிலை தோட்டத்திற்கு உட்பட்ட சின்கோனா பெரியகல்லார், சின்னக்கல்லார் ரயான் போன்ற எஸ்டேட் பகுதிகள் உள்ளன இவற்றில் சுமார் 1000 க்கும் குறைவான மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வசித்து வருகின்றனர்.

பெரியாகல்லர் 5 டாப் பகுதியில் 30க்கும் குறைவான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது கடந்த ஆண்டு 3 மாணவர்கள் படித்த பள்ளியில் 2 ஆசிரியர்கள் சத்துணவு பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் இந்தக் கல்வி ஆண்டில் பள்ளியில் படிக்க யாரும் வராத சூழ்நிலையில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடம் மாறி பள்ளியை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. மேலும் வால்பாறை பகுதிகளில் இது போன்ற பள்ளிகள் மூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.