கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. தற்போது வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் மக்கள் வாழும் இடத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இன்று சின்னத்தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நான்கு அடி நீளமுள்ள உடும்பு ஒன்று நுழைந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடும்பை பிடித்து மின்கம்பத்தில் கயிற்றால் கட்டி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடும்பை எடுத்துக்கொண்டு பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர். மாணவர்கள் படிக்கும் பள்ளி அருகே உடும்பு புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆட்டை விழுங்கிய பாம்பு.... நெஞ்சை படபடக்க வைக்கும் புகைப்படங்கள்