ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் - பொள்ளாச்சியில் ரத்த தான முகாம்!

கோயம்புத்தூர்: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.

Coimbatore district
Coimbatore district
author img

By

Published : Nov 1, 2020, 2:24 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 43ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக முரசொலி மன்றம் சார்பில் அதன் தலைவர் மணிமாறன் ஏற்பாட்டில் திமுக கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் செய்தனர். இதனை கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சியில் ரத்த தான முகாம்

அப்போது அவர் பேசுகையில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரக்கன்று நடுதல், முதியோர் இல்லங்களுக்கு அறுசுவை வழங்குதல், பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு இந்த மாதம் முழுவதும் கொண்டாட இருக்கிறோம். என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம். மேலும் செந்தில், கார்த்திகேயன், தங்கவேலு, சாந்து முகமது, பட்டீஸ்வரன் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ட்விட்டரிலும் தமிழ்நாட்டைப் புறக்கணித்த மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.