கோயம்புத்தூர்: அரசு மருத்துவமனை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்க காவல் துறையினர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (அக்.02) அரசு மருத்துவமனையில் இரு சக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைக்கு நோயாளியைப் பார்க்க வந்த நபர் ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதையறிந்த அடையாளம் தெரியாத நபர் ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் லாவகமாக வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கு வந்து பார்த்த வாகன உரிமையாளர் வாகனம் இல்லாததைக் கண்டு பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின்பேரில் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவ்வாகனம் திருடப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதனைக் கொண்டு காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 9ஆவது நாளாக 'T23' புலியை பிடிக்கும் பணி தீவிரம்!