கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள செல்லப்பாளையம் - ஆம்போதி கிராமத்தில் உள்ள வாழைத் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல் துறையினர் குழு அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.
இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்ச செல்லப்பாளையம்-ஆம்போதி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(52), வேலுச்சாமி (42) ஆகிய இருவரையும் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர். இதில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!