தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு போனஸை, இந்த ஆண்டு 10 விழுக்காடாக குறைத்து வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதைக் கண்டித்தும், கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய போனஸை வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 20% போனஸ் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், தீபாவளிப் பண்டிகையில் 7 விழுக்காடு போனஸ் கட்டாயமாகத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க:10%ஆக போனஸ் குறைப்பு: போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்