கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அரிமா சங்கம் மற்றும் திருநங்கைகள் சார்பில் ஓவியம் போட்டி, உணவுத் திருவிழா, நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் (Kalki Subramaniam) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின்போது திருநங்கை கல்கி சுப்பிரமணியம், "அரிமா சங்கம் மற்றும் திருநங்கைகள் சேர்ந்து பல விதமான உணவுகளை தயாரித்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.
அரசு முன்வர வேண்டும்
பொதுமக்கள் எங்களது உணவுகளை சாப்பிட்டு மகிழ்ச்சியாக செல்கின்றனர். தமிழ்நாட்டில் தங்களைப் போல் உள்ள திருநங்கைகள் ஒன்று சேர்ந்து இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். திருநங்கைகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர அரசு முன்வர வேண்டும்" என்றார்.
சிறப்பு பரிசு
இதில் அரிமா சங்க நிர்வாகிகள், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தானு மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிறப்பாக ஓவியம் மற்றும் உணவுகள் தயாரித்த திருநங்கைகள், சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: MK Stalin : ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம்; சாலைகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு