கோயம்புத்தூர்: அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மனநிலையை கருத்தில் கொண்டு மெலோடி பாடல்களின் கரோக்கி இசைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் பாதசாரிகள் நடந்து செல்வதற்கான சிக்னல் ஒன்றையும் கோவை மாநகர காவல் ஆணையர் இந்த பகுதியில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான சூழலில் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வரும்போது, மற்றும் சாலை விதிகளை மீறி நடக்கும் போது அவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டு உள்ளது. சிக்னலில் காவலில் உள்ள போக்குவரத்து காவலர் mic மூலம் பேசி வருகின்றனர்.
இந்த சிக்னலில் பணிபுரியும் அல்லித்துரை என்ற காவலர் சாலை விதிகளை மீறுவோருக்கு மைக் மூலமாக கொடுக்கும் அறிவுரை வழங்குவது கவனத்தை ஈர்த்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் காரில் செல்வது, தலைக்கவசம் அணியாமல் வருவது, சிக்னலில் வெள்ளை கோட்டை தாண்டி நிற்பது போன்ற விதிமுறைகளில் ஈடுபடுவோரிடம் மைக்கில் பேசுகிறார்.
அப்போது நகைச்சுவை கலந்த பாணியில் அவர் பேசுவது வாகன ஓட்டிகள் பலரையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு